அரசு பள்ளிகள் மின் கட்டணம் அரசே செலுத்த வேண்டும் தலைமையாசிரியர்கள் தீர்மானம்

UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 09:11 AM
மதுரை:
தமிழ்நாடு உயர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் திவ்யநாதன், அமைப்பு செயலாளர் ரகுபதி, மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜோசப், சக்கையன், மோகன், விநாயகமூர்த்தி, சாந்தி, லிங்கேஸ்வரி பங்கேற்றனர்.
பள்ளிகளில் ஹைடெக் லேப்பிற்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் இணைப்பை மெயில்களை பார்வையிடுதல், ஆசிரியர்களுக்கான சம்பள பில் தயாரிப்பது உள்ளிட்ட ஆன்லைன் பணிகளுக்கும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். உபரி ஆசிரியர்களை கணக்கிடும்போது குறைந்தது 7 பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். துாய்மை பணியாளர்கள், இரவு காவலர்களை நியமிக்க வேண்டும். அரசு பள்ளி மின்கட்டண செலவை அரசே நேரடியாக மின்வாரியத்திற்கு செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.