Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு ஐ.டி.ஐ., சேர்க்கை கடைசி நாள் ஜூன் 7

அரசு ஐ.டி.ஐ., சேர்க்கை கடைசி நாள் ஜூன் 7

அரசு ஐ.டி.ஐ., சேர்க்கை கடைசி நாள் ஜூன் 7

அரசு ஐ.டி.ஐ., சேர்க்கை கடைசி நாள் ஜூன் 7

UPDATED : மே 16, 2024 12:00 AMADDED : மே 16, 2024 10:30 AM


Google News
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபியில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. இங்கு மாணவர் சேர்க்கை இணைய தளம் மூலம் ஜூன், 7 வரை நடக்கிறது.

பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம், 750 ரூபாய் உதவித்தொகை, இலவச லேப்டாப், சைக்கிள், சீருடை, பாடப்புத்தகம், பஸ் பாஸ் வழங்கப்படும். ஆறாம் வகுப்பு முதல், 10 வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும்.

எட்டாம் வகுப்புடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ., பயிற்சியும், 10ம் வகுப்புடன், இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ., பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம், 10 மற்றும், பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விபரத்துக்கு ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யை, 0424 2275244, 94990 55703 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us