Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலைக்கல்லுாரி அலுவலர்கள் 6 மாதம் சம்பளம் இன்றி தவிப்பு

அரசு கலைக்கல்லுாரி அலுவலர்கள் 6 மாதம் சம்பளம் இன்றி தவிப்பு

அரசு கலைக்கல்லுாரி அலுவலர்கள் 6 மாதம் சம்பளம் இன்றி தவிப்பு

அரசு கலைக்கல்லுாரி அலுவலர்கள் 6 மாதம் சம்பளம் இன்றி தவிப்பு

UPDATED : செப் 16, 2024 12:00 AMADDED : செப் 16, 2024 08:51 AM


Google News
ஆண்டிபட்டி:
தமிழகம் முழுவதும் 41 அரசு கலை கல்லூரிகளில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 6 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

கோவை பாரதியார் பல்கலை., சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை., மதுரை காமராஜ் பல்கலை., காரைக்குடி அழகப்பா பல்கலை., திருச்சி பாரதிதாசன் பல்கலை., கட்டுப்பாட்டில் 41 அரசு கலை கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

2019ல் பல்கலை கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. அப்போது முதல் கல்லூரிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அரசு மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் சில மாதங்களாக அலுவலர்களுக்கான சம்பளம் அந்தந்த மாதத்தில் வழங்கப்படுவதில்லை. ஆறு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தவிப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:


அரசு கலை கல்லூரிகளில் இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் 20 ஆண்டுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் ரூ.6000 முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் பெறுகின்றனர்.

பல்கலையில் இருந்து அரசு நிர்வாகத்திற்கு மாற்றப்பட்ட போது அரசு மூலம் கல்லூரிகளில் பணியாளர் நியமனம் முடிந்த பின் தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்பவர்கள் வெளியேறிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இன்று வரை பணிபுரிகிறோம்.

20 ஆண்டுக்கும் மேலாக பணி செய்தும் பணி பாதுகாப்பு இல்லை. தற்போது சம்பளமும் ஆறு மாதங்களாக கிடைக்காததால் பணியாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

இவ்வாறு கூறினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us