மூன்று ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாத அரசு பள்ளிகள் பல லட்சம் ரூபாய் வீண்

UPDATED : பிப் 01, 2025 12:00 AM
ADDED : பிப் 01, 2025 11:49 AM

மதுரை:
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படாததால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். போதிய ஆசிரியர்கள் இன்றி கற்பித்தல் பணி முடங்குகிறது.
மாநிலத்தில் தேவைக்கு ஏற்ப அரசு நடு, உயர், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர், மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
மாணவர்கள் சேர்க்கை
இதன் வாயிலாக, மேல்நிலை கல்வியில் இடைநிற்றல் இல்லாத சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து, ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 2021ல் தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின், மூன்று ஆண்டுகளாக எந்தப் பள்ளியும் தரம் உயர்த்தப்படவில்லை.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். இதற்காக, பள்ளிகள் தங்கள் பங்களிப்பாக மேல்நிலை 2 லட்சம், உயர்நிலை 1 லட்சம், நடுநிலை, 50,000 ரூபாய் என, அரசுக்கு செலுத்த வேண்டும்.
அந்த வகையில் தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், ஆண்டு தோறும் தலா, 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலையாகவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன.
நடவடிக்கை
இதற்காக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளியில் தலா, 9 முதுகலை, உயர்நிலையில் தலா 5, நடுநிலையில், 3 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால், 2021க்கு பின், 100க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்தக்கோரி விண்ணப்பித்து, பங்களிப்பு தொகை செலுத்திய நிலையில், மூன்று ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படவில்லை. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் இல்லை. பல பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பி.ஜி., ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இது, அரசின் கொள்கை. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறைவாகவே உள்ளனர்.
தேவை ஏற்படும் நிலையில், தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.