திறனறி தேர்வில் மாநில அளவில் அரசு பள்ளி மாணவியர் சிறப்பிடம்

UPDATED : ஜன 02, 2025 12:00 AM
ADDED : ஜன 02, 2025 10:51 AM
நாமகிரிப்பேட்டை:
தமிழகத்தில், பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழக முதல்வரின் திறனறி தேர்வு நடத்தப்பட்டது. இதில், மாநில அளவில் முதல், 500 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக, 1,000 ரூபாய் வழங்கப்படும். இது அந்த மாணவ, மாணவியர் பட்டப்படிப்பு முடிக்கும் வரை கிடைக்கும்.
திறனறி தேர்வு, சில வாரங்களுக்கு முன் மாநிலம் முழுவதும் நடந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இதன் தேர்வு முடிவு, சில நாட்களுக்கு முன் வெளியானது.
இதில், நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் ரியனா பெய்த், பவித்ரா ஆகியோர், 98 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் செந்தில், பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.