Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறு தொழில்கள் துவங்க சிறப்பு பயிற்சி அளியுங்க!

சிறு தொழில்கள் துவங்க சிறப்பு பயிற்சி அளியுங்க!

சிறு தொழில்கள் துவங்க சிறப்பு பயிற்சி அளியுங்க!

சிறு தொழில்கள் துவங்க சிறப்பு பயிற்சி அளியுங்க!

UPDATED : ஏப் 11, 2024 12:00 AMADDED : ஏப் 11, 2024 10:16 AM


Google News
உடுமலை:
தென்னை நாரில், கயிறு திரித்தல் உள்ளிட்ட சிறு தொழில் துவங்க, பயிற்சி மற்றும் மானியத்தில் இயந்திரம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரமப்புறங்களில் உள்ள பெண்கள் கூறினர்.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள், கயிறு, மெத்தை ஆகிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இப்பகுதியில், அதிகளவு உள்ளன.

கேரளாவை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் கயிறு வாரியம், தென்னையிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வந்தது.

இவ்வாரியத்தின் வாயிலாக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி வழங்க, சில ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு, பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டு மாத பயிற்சிக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இத்திட்டம் செயல்பாட்டில் இல்லை.

இது குறித்து, கிராமப்புற பெண்கள் கூறியதாவது:

கயிறு மற்றும் மிதியடி தயாரிக்க பயிற்சி வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி பெற்றவர்களுக்கு இயந்திரம் கிடைக்கவில்லை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, கயிறு வாரியத்தின் நிதி ஒதுக்கீடு பெற்று, இயந்திரங்கள் வழங்க வேண்டும்.
எளிதாக மூலப்பொருள் கிடைக்கவும், கயிறு மற்றும் மிதியடி விற்பனைக்கு தனியார் நிறுவனங்களுடன், ஒப்பந்தம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால், நிரந்தர வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு,தெரிவித்தனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us