Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓலைச்சுவடி ஆய்வுக்காக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் புதுச்சேரி வருகை

ஓலைச்சுவடி ஆய்வுக்காக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் புதுச்சேரி வருகை

ஓலைச்சுவடி ஆய்வுக்காக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் புதுச்சேரி வருகை

ஓலைச்சுவடி ஆய்வுக்காக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் புதுச்சேரி வருகை

UPDATED : ஜூன் 07, 2024 12:00 AMADDED : ஜூன் 07, 2024 10:46 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி:
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஓலைச்சுவடி ஆய்வுப் பணிக்காக பாழடைந்த குடோனை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

புதுச்சேரி ஒயிட் டவுன் செயின்ட் லுாயிஸ் வீதியில், பிரான்ஸ் அரசு நிர்வாகத்தின் கீழ் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் இயற்கையையும், பண்பாட்டையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இங்கு ஓலைச்சுவடிக்கென்றே ஒரு நுாலகம் ஏற்படுத்தப்பட்டு, 8,400 ஓலைச் சுவடிகள் கட்டுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதில் இருந்து எழுத்து ஓலைச்சுவடி கட்டுகள் ஐயாயிரம், தமிழ் ஓலைச்சுவடிக் கட்டுகள் ஆயிரம், திகழாரி மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் தோராயமாக 400 கட்டுகளும் உள்ளன.தெலுங்கு, நந்தி நாகரி மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிக் கட்டுகளும் உள்ளன.இங்குள்ள ஓலைச்சுவடிகளில் கடவுளால் அருளப்பட்ட சைவ, ஆகம நுால்கள் நிறைய இருக்கின்றன.

இங்கிருப்பதைப் போன்ற சைவ சிந்தாந்த நுால்கள் உலகில் வேறெங்கும் இல்லை.அரிய நிறுவனங்கள் மற்றும் தகவல்களைப் பதிவு செய்யும் யுனெஸ்கோவின் 'மெமரி ஆப் தி வேல்டு' பதிவேட்டில் இங்குள்ள ஓலைச்சுவடி நுாலகம் 2005-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள ஓலைச்சுவடிகளை பூச்சிகள் அரித்து விடமால் இருக்க ஒவ்வொரு ஏட்டிலும் லெமன் கிராஸ் ஆயில் தடவி பாதுகாக்கப்படுகிறது.அதேசமயம், இந்தச் சுவடிகளில் உள்ள தகவல்கள் காலத்துக்கும் அழியாமல் இருக்க அனைத்தையும் டிஜிட்டலைஸ் பண்ணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஓலைச்சுவடிகளில் 250 மட்டும் காலம், பிறப்பிடம் அதன் எழுத்து வடிவங்கள் அதனை எழுதியவர்களின் அறிவியல் நோக்குகள் உள்ளிட்டவைகளை நவீன கருவிகளை கொண்டு ஆய்வு செய்வதற்கு ஜெர்மனியில் உள்ள ஹம்பர் யுனிவர்சிட்டியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர், ஏழு கண்டெய்னர்களில் ஆராய்ச்சிக் கருவியுடன் புதுச்சேரிக்கு வருகின்றனர்.

இதற்காக தற்காலிக ஆராய்ச்சிக் கூடம் புதுச்சேரி பழைய துறை வளாகத்தில் பாழடைந்து கிடந்த ஒரு குடோனை சீரமைத்து அமைக்கப்படுகிறது. இந்த கிடங்கில் கண்டெய்னர்கள் அமைக்கப்படுவதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us