Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மே 10ம் தேதி முதல் ஊட்டி மலர் கண்காட்சி

மே 10ம் தேதி முதல் ஊட்டி மலர் கண்காட்சி

மே 10ம் தேதி முதல் ஊட்டி மலர் கண்காட்சி

மே 10ம் தேதி முதல் ஊட்டி மலர் கண்காட்சி

UPDATED : மே 04, 2024 12:00 AMADDED : மே 04, 2024 11:12 AM


Google News
ஊட்டி: ஊட்டியில் நடைபெற இருந்த மலர் கண்காட்சி தேதி மாற்றப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை சீசன் துவங்கிய நிலையில், மலர் கண்காட்சி, மே மாதம், 17ல் துவங்கி, 22ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த தேதி மாற்றப்பட்டு, மே மாதம், 10ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை, முதன்முதலாக, 10 நாட்கள் நடக்கிறது. குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சி, மே 24ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவிலும் மலர்கள் முன்னதாக பூத்துள்ளதால், அவற்றை மாடங்களில் அடுக்கும் பணிகளும், பூங்காவை பராமரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us