அறிவு சார் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு

UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 08:43 AM
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் நகராட்சி அறிவு சார் மையத்தில், தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு வரும் 15ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன.
மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான, தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் மாதம் 19ம் தேதி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதந்தோறும் தலா ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 19ம் தேதி ஆகும். தேர்வு கட்டணம் ரூ. 50. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் வரும் 15ம் தேதி முதல் நடைபெற உள்ளன. கூடுதல் தகவல் வேண்டுவோர், நூலகர், அறிவுசார் மையம், மணிநகர், மேட்டுப்பாளையம், என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.