UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 05:58 AM
திண்டுக்கல்:
சத்துணவு திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சத்துணவு ஊழியர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி பணியாற்றுகின்றனர்.
தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்நடந்தது.
மாவட்ட தலைவர் ராமு தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் மாலதி,துரைராஜ்,செல்வி,பிரபாவதி முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாத்தி,மாவட்ட செயலாளர் சுந்தரி,மாவட்ட இணை செயலாளர்கள் சுகுமா,சண்முகபிரியா,பாண்டிராணி,பொருளாளர் சரஸ்வதி,டி.என்.ஜி.இ.ஏ.,மாவட்ட தலைவர் முபாரக்அலி பங்கேற்றனர். மாவட்ட இணை செயலாளர் ஜோதியம்மாள் நன்றி கூறினார்.