முதலாமாண்டு மாணவர் சேர்க்கை: தயாராகிறது வேளாண் பல்கலை

UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 05:38 PM

கோவை:
பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளன்று, பல்கலை முதலாம் ஆண்டுக்கான விண்ணப்ப பதிவு இணையவழியாக துவக்கப்படும். அதற்கு அனைத்து வகையிலும் தயார்நிலையில் இருப்பதாக , வேளாண் பல்கலை டீன் வெங்கடேச பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், அரசு மற்றும் இணைப்பு கல்லுாரிகள், 46 செயல்படுகின்றன. இதில், 14 இளநிலை பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளன.
கடந்தாண்டு, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வேளாண் படிப்புகளுக்காக பெறப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், முதலாம் ஆண்டு சேர்க்கை விரைவில் துவக்கும் வகையில், அதற்கான செயல்பாடுகள் வேளாண் பல்கலை தரப்பில் துவக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், மெரிட் செயல்பாடுகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில், எங்களின் இணையதள செயல்பாடுகள் உள்ளன. புதிதாக மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அண்ணா பல்கலை கவுன்சிலிங் குழுவுடன், எங்கள் இணையதள செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, மேலும் அதன் வெளிப்படைத்தன்மை மிக்க செயல்பாட்டை உறுதி செய்துள்ளோம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்றே, விண்ணப்ப பதிவுகளும் துவக்கப்படும். அதற்காக தயார்நிலையில் இருக்கின்றோம், என்றார்.