எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம்: தேசிய தகவல் மையம் விளக்கம்

UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 12:41 PM
சென்னை:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மாணவி பாலியல் வன்முறை சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியே தெரியும்படி இருந்து இருக்கலாம் என, தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்படும், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை, யாரும் பார்க்க முடியாதபடி செய்ய வேண்டும் என, போலீசார் சார்பில், தேசிய தகவல் மையத்திற்கு, இ - மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கு, அந்த மையம் அளித்துள்ள விளக்கம்: காவல்துறையின் கீழ் செயல்படும், மாநில குற்ற ஆவண காப்பகங்கள் வழங்கிய பட்டியலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், பதிவு செய்யப்படும் எப்.ஐ.ஆரை யாரும் பார்க்க முடியாதபடி, காவல் துறை இணையத்தில், எப்.ஐ.ஏ., வியூ என்ற பக்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட எப்.ஐ.ஆர்., வெளியே தெரிந்ததற்கு, ஐ.பி.சி., எனப்படும், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளை, பி.என்.எஸ்., எனப்படும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுக்கு மாற்றம் செய்த போது, ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்னை காரணமாக இருக்கலாம்.
இது தொடர்பாக, மாநில குற்ற ஆவண காப்பகத்திடம், எப்.ஐ.ஆர்., வியூ பக்கத்தை சரி பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இனி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த எப்.ஐ.ஆர்., யாருக்கும் தெரியாதபடி, லாக் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.