காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு கள பயிற்சி

UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:55 AM

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில், செய்யாறு அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லுாரி வரலாற்று துறை மாணவ - மாணவியருக்கு கல்வியிடை பயிற்சி, கடந்த மாதம் 20ம் தேதி துவங்கியது.
இதில், 15 நாட்களாக மாணவ - மாணவியருக்கு கல்வியிடை பயிற்சியாக அருங்காட்சியக மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அருங்காட்சியக பொருட்களை எவ்வாறு கையாள்வது, வரலாற்று துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என, பல்வேறு பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் நிறைவு நாளான நேற்று, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் மாணவ - மாணவியருக்கு நேரடி களபயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பல்லவர் கால கட்டட கலைகள், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், மாணவ -மாணவியருக்கு விளக்கம் அளித்தார்.
அதை தொடர்ந்து பயிற்சியை நிறைவு செய்த மாணவ- மாணவியருக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. அருங்காட்சியக நண்பர்கள் அமைப்பை சார்ந்த கவிஞர் செல்வராசன் மாணவர்களுக்கான களப் பயணயத்திற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.