Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/453 இடைநிற்றல் மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர களஆய்வு

453 இடைநிற்றல் மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர களஆய்வு

453 இடைநிற்றல் மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர களஆய்வு


UPDATED : ஜூன் 16, 2025 12:00 AM

ADDED : ஜூன் 16, 2025 08:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2025 12:00 AM ADDED : ஜூன் 16, 2025 08:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் :
விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்ட கள ஆய்வில் பள்ளிக்கு வராமல் உள்ள 453 இடைநிற்றல் மாணவர்கள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.

6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்களில் பள்ளிக்கு வராமல் உள்ள 1495 இடைநிற்றல் மாணவர்கள் மாவட்டம் முழுவதும் கண்டறியப்பட்டனர். இவர்கள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர்வதற்கான முயற்சிகளை செய்யும் வகையில் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் இன்று முதற்கட்ட கள ஆய்வு செய்தனர்.

இதில் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 8 மாணவர்கள், காரியாபட்டியில் 61, சாத்துாரில் 103, ஸ்ரீவில்லிப்புத்துாரில் 10, வெம்பக்கோட்டையில் 47, சிவகாசியில் 22, ராஜபாளையத்தில் 97, விருதுநகர் ஒன்றியத்தில் 105 என மொத்தம் 453 இடைநிற்றல் மாணவர்களை அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து பள்ளிக்கு வராத காரணங்கள் கேட்டு அறிவுரை, ஆலேசானைகளை வழங்கினர். விருதுநகரின் நகர், ஊரகப்பகுதிகளில் 5 இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us