Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ எங்க ஊர்ல புத்தக திருவிழா எல்லோரும் அவசியம் வாங்க! உறவுகளுக்கு கடிதம் எழுதிய மாணவியர்

எங்க ஊர்ல புத்தக திருவிழா எல்லோரும் அவசியம் வாங்க! உறவுகளுக்கு கடிதம் எழுதிய மாணவியர்

எங்க ஊர்ல புத்தக திருவிழா எல்லோரும் அவசியம் வாங்க! உறவுகளுக்கு கடிதம் எழுதிய மாணவியர்

எங்க ஊர்ல புத்தக திருவிழா எல்லோரும் அவசியம் வாங்க! உறவுகளுக்கு கடிதம் எழுதிய மாணவியர்

UPDATED : ஜன 22, 2025 12:00 AMADDED : ஜன 22, 2025 08:53 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:
திருப்பூரில் நடக்க இருக்கிற புத்தக திருவிழாவில் உற்றார், உறவினர்களை பங்கேற்க செய்யும் வகையில், மாணவியர் கடிதம் எழுதி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருப்பூர் புத்தக திருவிழா, நாளை, (23ம் தேதி) துவங்க இருக்கிறது. திருப்பூர் காங்கயம் சாலை, வேலன் ஓட்டல் மைதானத்தில், அடுத்த மாதம், 2ம் தேதி வரை, 11 நாட்களுக்கு நடக்கிறது.

புத்தக கண்காட்சியில் திரளான மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்று, அறிவு சார்ந்த விஷயங்களை அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

பள்ளி வளாகத்தில் துவங்கிய மாரத்தான் ரயில் நிலையம், குமரன் நினைவகம், காதர்பேட்டை, ராயபுரம் வழியாக, மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. பின், பள்ளி மாணவியரிடையே வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், கயிறு என்ற புத்தகம் வாசிக்கப்பட்டது. பின், 250க்கும் மேற்பட்ட மாணவிகள், புத்தக திருவிழாவுக்கு வருமாறு தங்கள் உறவினர்களுக்கு கடிதம் எழுதி தபால் அனுப்பினர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், புத்தக திருவிழா ஏற்பாட்டாளர் ஈஸ்வரன், பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, ஆசிரியர்கள், மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us