இ.எஸ்.ஐ., செவிலியர் அதிகாரி தேர்வு
இ.எஸ்.ஐ., செவிலியர் அதிகாரி தேர்வு
இ.எஸ்.ஐ., செவிலியர் அதிகாரி தேர்வு
UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 09:43 AM
புதுச்சேரி:
மத்திய தேர்வாணையம் நடத்திய செவிலியர் அதிகாரி தேர்வை, புதுச்சேரியில் 2,672 பேரும், நேர்முக உதவியாளர் தேர்வை 93 பேரும் எழுதினர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நேர்முக உதவியாளர் பதவி மற்றும் இ.எஸ்.ஐ., செவிலியர் அதிகாரி பதவிக்கான போட்டி தேர்வை நேற்று நாடு முழுவதும் நடத்தியது.
புதுச்சேரியில் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நேர்முக உதவியாளர் தேர்வு காலை 9:30 மணி முதல் 11:30 வரை முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இதேபோல் இ.எஸ்.ஐ., செவிலியர் அதிகாரி தேர்வு மதியம் 2:00 மணி முதல் 4:00 வரையில் நடந்தது. இத்தேர்வு அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் இன்ஜினிரியங் கல்லுாரி, பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி, உப்பளம் இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளி, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரி உள்ளிட்ட 8 மையங்களில் நடந்தது.
நேர்முக உதவியாளர் தேர்விற்கு 315 பேர் விண்ணப்பிருந்த நிலையில், 93 பேர் மட்டுமே எழுதினர். மதியம் நடந்த செவிலியர் அதிகாரி தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 3,305 பேரில், 2,672 பேர் எழுதினர். தேர்வு மையத்திற்கு வந்த தேர்வர்கள், பல சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். மின் சாதன பொருட்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சிறப்பு பஸ் வசதி
புதுச்சேரி அரசு, தேர்வர்களின் வசதிக்காக தேர்வு நடக்கும் மையங்களுக்கு வருவதற்கும், தேர்வு முடிந்து பஸ் நிலையம் செல்வதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.