சி.பி.சி.எல்., வழங்கும் நுழைவு தேர்வு பயிற்சி

UPDATED : ஜூன் 20, 2024 12:00 AM
ADDED : ஜூன் 20, 2024 08:43 AM
சென்னை: சி.பி.சி.எல்., எனும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், சி.பி.சி.எல்., சூப்பர் 30 என்ற பெயரில், மாணவர்களுக்கு ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி அளிக்க உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிளஸ் 2 முடித்த, 30 மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சியை சி.எஸ்.ஆர்.எல்., உடன் இணைந்து அளிக்க உள்ளது.
இதற்கான பயிற்சி வகுப்புகள், மணலியில் உள்ள சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரியில் வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறவுள்ள 30 மாணவர்களை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் நுழைவு தேர்வு வரும், 23ம் தேதி நடக்கிறது.
கூடுதல் விபரங்களை, 63809 88951 மொபைல் போன் எண்ணிலும், www.csrl.in இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.