Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

UPDATED : ஜூலை 10, 2024 12:00 AMADDED : ஜூலை 10, 2024 12:00 PM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஜூனில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.87 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். 1.55 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றினர்.

இவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியல், இன்ஜினியரிங் கமிட்டியின், https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.