Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வருமான வரி பிடித்தம் களஞ்சியம் ஆப் பில் பதிவேற்றம் செய்ய ஊழியர்கள் எதிர்பார்ப்பு

வருமான வரி பிடித்தம் களஞ்சியம் ஆப் பில் பதிவேற்றம் செய்ய ஊழியர்கள் எதிர்பார்ப்பு

வருமான வரி பிடித்தம் களஞ்சியம் ஆப் பில் பதிவேற்றம் செய்ய ஊழியர்கள் எதிர்பார்ப்பு

வருமான வரி பிடித்தம் களஞ்சியம் ஆப் பில் பதிவேற்றம் செய்ய ஊழியர்கள் எதிர்பார்ப்பு

UPDATED : ஜன 21, 2025 12:00 AMADDED : ஜன 21, 2025 09:56 AM


Google News
ராமநாதபுரம்: வருமான வரி பிடித்தம் கணக்கு விபரங்களை களஞ்சியம் ஆப் பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு அலுவலரும் தனித்தனியாக வரிப்பிடித்தம் குறித்த கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியது இருக்காது என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வருமான வரி மாதம் தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இறுதியில் பிப்., மாதம் 10 ம் தேதிக்குள் ஒவ்வொரு ஊழியரும் வரி பிடித்தம் நிலுவையில்லை என்ற கணக்கை சம்பளம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய வருமான வரியானது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை மூலம் களஞ்சியம் ஆப்-ல் உள்ளது.

இதில் மாதந்தோறும் சம்பளம் வழங்கும் போது மொத்த சம்பளம், ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்பட்ட வரித்தொகை, மீதி வரி நிலுவையில்லை என்ற விபரங்களை பிப்., மாதம் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வசதியினை ஏற்படுத்தினால் போதும். இதற்காக ஒவ்வொரு அலுவலரும் தனித்தனியாக வரிப்பிடித்தம் குறித்த கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியது இல்லை.

வருமான வரி கணக்கினை சரி பார்க்கும் வேலையும் இருக்காது. நம்பகத்தன்மையும் இருக்கும் என்பதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு களஞ்சியம் ஆப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.








      Our Apps Available On




      Dinamalar

      Follow us