அரசு பள்ளி மாணவர்களுக்கு இ மெயில் ஐ.டி., ஓபன்

UPDATED : நவ 17, 2024 12:00 AM
ADDED : நவ 17, 2024 08:27 AM

திண்டுக்கல் :
கல்வித்துறை சார்பில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் பயன்பாடுகளுக்காக இ மெயில் ஐ.டி., ஓபன் செய்யும் பணி நடந்து வருகிறது.
உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் 9, 10, 11,12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக இ மெயில் ஐ.டி.,ஓபன் செய்ய கல்வித்துறை உயர் அதிகாரிகள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். அதன்படி முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இமெயில் ஐ.டி.,ஓபன் செய்யும் பணிகள் முடிந்தது. தற்போது 2வது கட்டமாக 9, 10, 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இமெயில் ஐ.டி.,ஓபன் செய்யும் பணிகளை கல்வித்துறை அலுவலர்கள் துவக்கியுள்ளனர்.
மாவட்டந்தோறும் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் தனித்தனியாக விபரங்களை பெற்று அவர்கள் விரும்பும் பெயரில் அவர்களுக்கான ஐ.டி.,க்கள் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இமெயிலுக்கு அனுப்பப்படும். அடுத்தகட்டமாக கல்லுாரி படிக்க விரும்புவோருக்கும் எளிதில் கல்லுாரி விபரங்கள் அனுப்பப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.