Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடவுள் இருக்காரா? இல்லையா? நம்பலாமா? கூடாதா?': அமெரிக்க பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

கடவுள் இருக்காரா? இல்லையா? நம்பலாமா? கூடாதா?': அமெரிக்க பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

கடவுள் இருக்காரா? இல்லையா? நம்பலாமா? கூடாதா?': அமெரிக்க பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

கடவுள் இருக்காரா? இல்லையா? நம்பலாமா? கூடாதா?': அமெரிக்க பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

UPDATED : ஆக 29, 2024 12:00 AMADDED : ஆக 29, 2024 11:34 AM


Google News
வாஷிங்டன்: அமெரிக்காவில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டுப்பாடத்தில், கடவுள் இருப்பது உண்மையா? உண்மையில் சாத்தான் உள்ளதா? என கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையுடன் சமூக வலைதளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் உள்ள ஸ்கியாடூக் பப்ளிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் ஆராய்ச்சி செய்து, உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி சில கேள்விகள் கொடுத்து விடை அளிக்கும்படி வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற கேள்விகளை, மாணவியின் தாயார் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட அது சர்ச்சையை உண்டாக்கியது.

அதில் இடம்பெற்ற கேள்விகள்
1. உலகம் உருவானது எப்படி?

2. அதனை உருவாக்கியது யார்?

3. எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா?

4. ஒழுக்கம் என்றால் என்ன?

5. மதம் என்றால் என்ன?

6. கிறிஸ்துவம் என்றால் என்ன?

7. கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன?

8. கடவுள் இருப்பது உண்மையா?

9. சாத்தான் இருப்பது உண்மையா?

10. நல்லது அல்லது கெட்டது அல்லது இரண்டையும் மக்கள் ஏற்றுக் கொண்டனரா? என கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.

இதனை மாணவியின் தாயார் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ஒக்லஹாமாவில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட வீட்டுப்பாடம். உலக வரலாற்று வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள். இதனை ஆராய்ச்சி தாள் என சொல்கின்றனர். ஒட்டுமொத்தமாகவும், தொழில்நுட்ப ரீதியிலும் இது அற்பத்தனமானது என பதிவிட்டு உள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்பள்ளியையும் கேட்கப்பட்ட கேள்விகளையும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த கேள்விகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என அந்தபள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us