அரசு பள்ளி மாணவர்களுக்கு காலண்டர் விநியோகம்

UPDATED : ஜன 03, 2025 12:00 AM
ADDED : ஜன 03, 2025 09:08 AM
புதுச்சேரி:
எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில், தினசரி காலண்டர் வழங்கப்பட்டது.
புதுச்சேரி சாரம் எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப் பள்ளியில் 1990 முதல் 2000 வரை படித்த முன்னாள் மாணவர்கள் எஸ்.ஆர்.எஸ்., -90 என்ற வாட்ஸ் ஆப் குழுவை ஏற்படுத்தி, பள்ளிக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் தினசரி காலண்டர் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தினசரி காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
தலைமையாசிரியை அனிதா தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அண்ணாமலை, அமுதா, புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் புகைப்படம் இடம் பெற்ற காலண்டரை வழங்கினர்.
ஆசிரியர்கள் லடசுமி பிரியா, மல்லிகா, பவுலின் மேரி, ஜெயலட்சுமி, ஆரோக்கிய மேரி, ஸ்டெல்லா மேரி, காண்டிபன், விஜயா, முன்னாள் மாணவர்கள் முரளி, ரகுராமன், முகமது கவுஸ், ஹரிகரன், பாக்கியராஜ், ஜெயலட்சுமி, குப்புசாமி கலந்து கொண்டனர்.