Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஐ., தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

எஸ்.ஐ., தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

எஸ்.ஐ., தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

எஸ்.ஐ., தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

UPDATED : ஏப் 14, 2024 12:00 AMADDED : ஏப் 14, 2024 06:28 PM


Google News
மதுரை:
எஸ்.ஐ.,தேர்வு பட்டியலுக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை மாவட்டம் மேலுார் அருகே அடஞ்சான் கண்மாய்பட்டி பிரபாகரன் தாக்கல் செய்த மனு:


காவல்துறையில் எஸ்.ஐ., பணி, தீயணைப்புத்துறையில் நிலைய அலுவலர் பணி நியமனத்திற்கான ஒருங்கிணைந்த தேர்விற்கு தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2023 மே 5ல் அறிவிப்பு வெளியிட்டது.

எழுத்து, உடற்தகுதி தேர்வில் பங்கேற்றேன். விளையாட்டு வீரருக்குரிய இட ஒதுக்கீட்டில் சலுகை பெற எனக்கு தகுதி உள்ளது. அதற்கான சான்றை சமர்ப்பித்தேன். தேர்வானோரின் தற்காலிக பட்டியலில் எனது பெயர் இடம் பெற்றது. இறுதி தற்காலிக பட்டியலில் எனது பெயர் இல்லை.

தேர்வு வாரியம் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. இது சட்டவிரோதம். தற்காலிக தேர்வு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்குரிய ஒதுக்கீட்டில் எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார்.

அரசு தரப்பு:
தீயணைப்புத்துறை ஒருங்கிணைந்த பணி நியமன தேர்வு நடைமுறையில் விளையாட்டு வீரர்களுக்குரிய இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
இவ்வாறு தெரிவித்தது. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us