தர்மத்துக்கு துணை நிற்கும் ஊடகங்களுக்கு தார்மிக் விருது!

UPDATED : நவ 17, 2024 12:00 AM
ADDED : நவ 17, 2024 08:21 AM

கோவை:
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும், விழித்திடு; எழுந்திடு; உறுதியாக இரு என்கிற இரு நாள் மாநாடு, கோவையில் நவ., 30 மற்றும் டிச., 1ல் நடக்கிறது; தர்மத்துக்கு துணை நிற்கும் ஊடகங்களுக்கு'தார்மிக் விருது வழங்கப் படுகிறது.
தேசத்தின் எதிர் காலத்தை செதுக்கும் வகையில், வாய்ஸ் ஆப் கோவை அமைப்பு சார்பில், விழித்திடு, எழுந்திடு, உறுதியாக இரு என்ற தலைப்பில், ஏ3 (அவேக், அரைஸ், அசெர்ட்) மாநாடு, கோவை - அவிநாசி ரோடு, கொடிசியா-இ ஹாலில் வரும், 30 மற்றும் டிச., 1ம் தேதி என, இரு நாட்கள் நடக்கிறது. நாட்டின் வளர்ச்சியை தாரக மந்திரமாகக் கொண்டு மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டம் குறித்து மக்களிடம் புரிதலை ஏற்படுத்தும் விதமாக இம்மாநாடு இடம்பெறுகிறது.
மாநாட்டின் முதல் நாளான, வரும், 30ம் தேதி, மத்திய அமைச்சர் எல்.முருகன், இரண்டாம் நாளான டிச., 1 அன்று முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தவிர, எச்.ராஜா, பேராசிரியர் ராம சீனிவாசன், அர்ஜூன் சம்பத், கேரள மாநில முன்னாள் டி.ஜி.பி., அலெக்சாண்டர் ஜேக்கப் உட்பட, 29 பேர் பங்கேற்கின்றனர்.
நம் நாட்டில் இருந்து ஆன்மிக சொற்பொழிவாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என, பல்துறை வல்லுனர்கள் கருத்துகளை பரிமாற உள்ளனர். காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இம்மாநாட்டை, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்து, சொற்பொழிவாற்றுகிறார்.
முதல் நாளில் தர்மம், சனாதன தர்மம், ஆன்மிகம் சார்ந்த தலைப்புகளிலும், இரண்டாம் நாளில் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் குறித்தும் பேசப்படுகிறது. ஒவ்வொருவரும் தலா, 40 நிமிடங்கள் வரை பேச உள்ளனர். இறுதியாக, மக்களின்கேள்விகளுக்கு வல்லுனர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
தார்மிக் விருது!
வாய்ஸ் ஆப் கோவை நிறுவனர் தலைவர் சுதர்சன் சேஷாத்ரி கூறுகையில், தர்மத்துக்கு துணை நிற்கும் சமூக ஊடகங்களுக்கு மாநாட்டில் தார்மிக் விருது வழங்கப்படுகிறது.நாடு முன்னேற பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் வகுத்து வரும் நிலையில், மக்களிடம் இதுகுறித்து கொண்டு சென்று, வழி நடத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்படுகிறது, என்றார்.
இம்மாநாட்டில், நாட்டின், 75 ஆண்டு கால அரசியலமைப்பு என்ற தலைப்பில் பேராசிரியர் ராம சீனிவாசன், தமிழ் வரலாற்றின் புராணங்கள், உண்மைகள் குறித்து உளவியல் நிபுணர் மீனாட்சி நாகராஜன், ஹிந்து ஆலயங்கள் குறித்து எச்.ராஜா, ஹிந்து தர்மம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆச்சார்யா மனோஜ் உட்பட பலர் பல்வேறு தலைப்புகளில் சொற் பொழிவு, கருத்துகள் பரிமாற உள்ளனர்.
முன்பதிவு அவசியம்
காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க அனுமதி இலவசம். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால், www.voiceofcovai.com என்ற இணையதள முகவரியிலும், 80568 46843, 95390 09032, 89392 22250, 80726 61870, 95003 29065 ஆகிய மொபைல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.