Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் உயர் கல்வி குறித்து எஸ்.ஆர்.எம்.,மில் விவாதம்

இந்தியாவில் உயர் கல்வி குறித்து எஸ்.ஆர்.எம்.,மில் விவாதம்

இந்தியாவில் உயர் கல்வி குறித்து எஸ்.ஆர்.எம்.,மில் விவாதம்

இந்தியாவில் உயர் கல்வி குறித்து எஸ்.ஆர்.எம்.,மில் விவாதம்

UPDATED : மே 17, 2024 12:00 AMADDED : மே 17, 2024 08:56 AM


Google News
மறைமலை நகர்:
மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், நேற்று முன்தினம், இந்தியாவில் உயர்கல்வி, என்.இ.பி., அமலாக்க சூழலின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் வட்டமேசை விவாதம் நடந்தது.

இந்திய கல்வி ஊக்குவிப்பு சங்கம் மற்றும்- எஸ்.ஆர்.எம்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியை, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீத்தாராம் துவக்கி வைத்தார். தேசத்தை கட்டி எழுப்புவதில், பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பங்கு உள்ளதாக, அப்போது அவர் பேசினார்.

எஸ்.ஆர்.எம்., கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைவேந்தர் சத்யநாராயணன் பேசியதாவது:

அரசு கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றிய காலத்தில் இருந்து, நாட்டின் வளர்ச்சியில் தனியார் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால், நாடு வெகு துாரம் முன்னேறி உள்ளது. தனியார் கல்வி நிறுவனத்தை துவங்குவது எளிதானது அல்ல. நாட்டின் உயர்கல்வி முன்னேற்றத்திற்கு, ஏ.ஐ.சி.டி.இ., போன்ற நிறுவனங்கள் உதவியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த துறை தலைவர்கள், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us