Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சைப்ரஸ் உதவித்தொகை

சைப்ரஸ் உதவித்தொகை

சைப்ரஸ் உதவித்தொகை

சைப்ரஸ் உதவித்தொகை

UPDATED : ஏப் 11, 2024 12:00 AMADDED : ஏப் 11, 2024 05:47 PM


Google News
Latest Tamil News
சைப்ரஸ் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் சி.ஐ.என்.ஜி., எனும் சைப்ரஸ் நரம்பியல் மற்றும் மரபியல் நிறுவனம், இந்திய மாணவர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான உதவித்தொகையை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறிமுகம்:

சைப்ரசில் முன்னணி ஆராய்ச்சி மையமான சைப்ரஸ் நரம்பியல் மற்றும் மரபியல் கல்வி நிறுவனம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி, சேவைகள் மற்றும் கல்வித் துறைகளில் செயல்பட்டு வருகிறது.
நரம்பியல், மரபியல், உயிரியல் மருத்துவம், மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் மிகவும் வளர்ந்த ஆராய்ச்சி உள்கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 2012ம் ஆண்டு முதல் எம்.எஸ்சி., மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது. தேசிய மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து ஆராய்ச்சி மானியங்ளை இக்கல்வி நிறுவன மாணவர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது.
படிப்புகள்:

எம்.எஸ்சி., - மாலிகுலர் மெடிசின்
எம்.எஸ்சி., - மெடிக்கல் ஜெனடிக்ஸ்
எம்.எஸ்சி., - நியூரோசயின்ஸ்
எம்.எஸ்சி., - பயோடெக்னாலஜி
இவை அனைத்தும் சைப்ரஸ் குடியரசு, ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் மற்றும் இதர நாடுகளின் அங்கீகாரம் பெற்ற படிப்புகள்.

படிப்பு காலம்:
13 மாத முழுநேர படிப்பு அல்லது 2 ஆண்டுகள் பகுதிநேர படிப்பு

தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் துறை சார்ந்த பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லாத மொழியில் இளநிலை பட்டம் பெற்றிருக்கும்பட்சத்தில், ஆங்கில மொழி புலமைக்கான பிரத்யேக சான்று பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.cing.ac.cy எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

மே 14

விபரங்களுக்கு:


இணையதளம்:
www.cing.ac.cy/en/education மற்றும் www.education.gov.in
இமெயில்:
marial@cing.ac.cy மற்றும் education@cing.ac.cy
தொலைபேசி:
+35722392840, +35722392842





      Our Apps Available On




      Dinamalar

      Follow us