தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற தொடர் கற்றல் அவசியம்

UPDATED : மார் 27, 2024 12:00 AM
ADDED : மார் 27, 2024 11:10 AM

கோவை:
மாறிவரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, கூடுதல் படிப்புகளைக் கற்றுக்கொண்டே இருந்தால், மாணவர்கள் ஜொலிக்கலாம் என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசினார்.இதுகுறித்து, அவர் பேசியதாவது:
புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கும். தொடர் கற்றல் இருந்தால் மட்டுமே எந்த துறையானாலும் ஜொலிக்க முடியும். குடும்ப வருமானத்துக்கு ஏற்ப கல்வியைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.ஜேஇஇ மெயின் தேர்வில் 20 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தாலே, தேர்ச்சி பெற்றுவிடலாம். நீட் தேர்வைப் பொறுத்தவரை 80 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றுவிடலாம். நிறைய துறைகள் உருவாகியுள்ளன. எதில் என்னென்ன வாய்ப்பு உள்ளது என்பதைப் பார்த்துவிட்டுதான் தேர்ந்தெடுக்க வேண்டும்.பிளஸ் 2 முடித்த பிறகு,வேலைவாய்ப்பு தரும் படிப்புகள் எவை என்பதை, ஆய்வு செய்ய வேண்டும். எதைப் படிக்கிறீர்கள் என்பதைவிட, எங்கு படிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். தேசிய கல்வி நிறுவனங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.தனியார் கல்வி நிறுவனங்களில்சேருவதாக இருந்தால், நீங்கள் தேர்வு செய்யும் துறையில், கடந்தாண்டில் எத்தனை பேர் தொழில் நிறுவனங்களில், பிளேஸ்மென்ட் ஆகியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.10, 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். 80க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் உள்ளன. இதற்குப் பின் வரவுள்ள நுழைவுத் தேர்வுகள் எதுவாக இருந்தாலும், விண்ணப்பித்து தேர்வு எழுதுங்கள். இதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.