தேர்ச்சி பெறாத மாணவர் நிலை மேலாண்மை குழுவுடன் ஆலோசனை

UPDATED : மே 16, 2024 12:00 AM
ADDED : மே 16, 2024 10:45 AM

திருப்பூர் :
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாநகராட்சி பள்ளி மாணவர்களை துணைத்தேர்வில் பங்கேற்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசனை நடந்தது.
நடைபெற்று முடிந்த, 10ம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் ஏராளமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறவில்லை.
தேர்ச்சி பெறாத மாணவர்களை துணைத்தேர்வில் பங்கேற்க வைப்பது, பிளஸ் 2வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர் கல்வியில் சேர வைப்பது, 10ம் வகுப்பு மாணவர்களை முறையாக மேல்நிலைக் கல்வி அல்லது தொழிற் பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் போன்றவற்றில் சேர வழிகாட்டுவது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதனடிப்படையில், ஜெய்வபாய், பழனியம்மாள், நஞ்சப்பா, அனுப்பர்பாளையம், குமார் நகர் ஆகிய பள்ளிகளில் நேற்று ஆலோசனை் கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். அந்தந்த பள்ளிகளின் பள்ளி மேலாண்மை குழுவினர், தலைமையாசியர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பித்தல், உரிய பாடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் முழு முயற்சி மேற்கொண்டு அனைத்து மாணவர்கள் தேர்ச்சி மற்றும் தொடர்ந்து உயர்கல்வி கற்றல் ஆகியன மேற்கொள்ளவும், பள்ளி மேலாண்மை குழுவினர் உரிய ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் வழங்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.