அரசு பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்

UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 10:00 AM

நாமக்கல் :
அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை துவங்குவது குறித்து ஆலோசனை கூட்டம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் முன்னிலை வகித்தார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் மேல்நிலைக்-கல்வியை முடித்தவுடன் பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலைவாய்ப்பு பெறவும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான எளிய வழி, தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தான். அதற்கேற்ப, அடிப்படை இயந்திரவியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணு பொறியியல், செவிலியம், நெசவியலும் ஆடை வடிவமைப்பும், வேளாண் அறிவியல், அலுவலக மேலாண், கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கையியல், அடிப்படை கட்டட பொறியியல், அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல், நெசவியல் தொழில் நுட்பம், உணவக மேலாண் ஆகிய, 12 பாடப்பிரிவுகளில், ஏதாவது ஒன்றை, தொழிற்கல்வி இல்லாத அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் என, பள்ளிக்-கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, புதிய தொழிற்கல்வியை தொடங்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அதன் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.