மாணவர்கள் கல்வி உதவித்தொகை நிலுவையின்றி பெற கலந்தாய்வு

UPDATED : பிப் 01, 2025 12:00 AM
ADDED : பிப் 01, 2025 10:40 AM
விருத்தாசலம்:
மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை நிலுவையின்றி கிடைத்திட தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வு நடந்தது.
விருத்தாசலம் விருத்தாம்பிகை கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த பயிற்சிக்கு, டி.இ.ஓ., துரைபாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளி கல்வி ஆய்வாளர் சிவாஜி வரவேற்றார். கல்வி மாவட்டத்தை சேர்ந்த 140 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதனை அனைத்து மாணவர்களும் பெற்று பயனடைய வேண்டும்.
சில மாணவர்கள் வங்கிக்கணக்கு இல்லாதது, ஆதார் கார்டில் குளறுபடி, மொபைல் போன் எண் பதிவு செய்யாதது என உதவித்தொகை பெறாமல் உள்ளனர். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து, அனைத்து மாணவர்களும் உதவித்தொகை பெறும் வகையில் பணிபுரிந்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், உதவித்தொகை பெறாமல் நிலுவையில் உள்ள மாணவர்களின் விபரங்கள் ஆன்லைன் மூலம் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.