Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மேம்பாலம் கட்டுவதால் நெரிசல் தீராது ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் திட்டவட்டம்

மேம்பாலம் கட்டுவதால் நெரிசல் தீராது ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் திட்டவட்டம்

மேம்பாலம் கட்டுவதால் நெரிசல் தீராது ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் திட்டவட்டம்

மேம்பாலம் கட்டுவதால் நெரிசல் தீராது ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் திட்டவட்டம்

UPDATED : அக் 31, 2024 12:00 AMADDED : அக் 31, 2024 11:28 AM


Google News
Latest Tamil News
சென்னை:
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையில் பொது போக்குவரத்து வசதி அதிகரிப்பதோடு, அறிவுசார்ந்த போக்குவரத்து முறையை கொண்டுவர வேண்டுமென, போக்குவரத்து துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மக்கள் அன்றாடமும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக போக்குவரத்து நெரிசல் மாறிவிட்டது. ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, போரூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில், வழக்கமாக நாட்களில் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்கின்றன. இதுவே, மழை பெய்து விட்டால், ஆங்காங்கே சாலைகளில் குளம்போல் நீர் தேங்குகிறது. வாகன போக்குவரத்து, மணி கணக்கில் முடங்கி விடுகிறது.

மேம்பாலங்கள் கட்டுவது, சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் மட்டுமின்றி, அறிவுசார்ந்த போக்குவரத்து முறையை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலில் இருந்து, சென்னை மக்கள் எப்படி தப்பித்து செல்வது, வேறு சாலை வழியாக எவ்வளவு நேரத்தில் கடந்து செல்ல முடியும் என்பது உள்ளிட்ட தகவல்களை, புதிய தொழில்நுட்பம் வாயிலாக வழங்க வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் கூறியதாவது:


தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரிக்கிறது. ஆனால், சாலை மேம்பாட்டுப் பணிகள் குறைவாக உள்ளது. சாலைகள் விரிவாக்கம், மேம்பாலம் கட்டுவது என்பது பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை குறைக்காது.

பொதுபோக்குவரத்து வசதியை தடையின்றி அளித்தால், மக்கள் சொந்த வாகனங்களின பயன்பாட்டை குறைத்து கொள்வர். இதனால், 20 சதவீதம் வரை நெரிசலை குறைக்க முடியும்.

அதாவது, மாநகர பஸ்கள் எண்ணிக்கையை, 7,000 ஆக அதிகரிக்க வேண்டும். பிரத்யேக தனிபாதை மற்றும் சிக்னல் முறைகளை கையாள வேண்டும். ரயில், மெட்ரோ, பஸ் நிலையங்களுக்கு மக்கள் வந்து செல்ல, இணைப்பு வாகன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் இன்டிலிஜென்ட், டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் எனப்படும் அறிவுசார்ந்த போக்குவரத்து முறையை அமல்படுத்த வேண்டும். அதன்படி, முக்கிய சாலைகளில் நெரிசல் குறித்து, போக்குவரத்து தகவல்கள் பெறும் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு தகவல் அளிக்கலாம். இதனால், போக்குவரத்து நெரிசல் மேலும், 3 சதவீதம் வரை குறைக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us