சிட்டுக்குருவிக்கு வீடு கட்டிக் கொடுங்க! மாணவ சிட்டுகளுக்கு ஊக்குவிப்பு

UPDATED : மார் 27, 2024 12:00 AM
ADDED : மார் 27, 2024 10:36 AM

திருப்பூர்:
சிட்டுக்குருவிக்கு, வாழ்விடம் அமைத்துக் கொடுக்கும் மாணவருக்கு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் குமார்நகர் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில், உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியை காயத்ரி தலைமை வகித்தார்.திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் பேசியதாவது:
மொபைல் போன் டவர் களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான், சிட்டுக்குருவியினம் குறைவதற்கு காரணம் என பரவலான கருத்து உள்ளது; இது, தவறு. மொபைல் போன் டவருக்கும், சிட்டுக்குருவிக்கும் சம்பந்தம் இல்லை. மனிதர்கள் வசிக்கும் இடங்களில், ஓட்டு வீடுகளின் இடுக்குகளில் வாழ்ந்து பழகிய சிட்டுக்குருவிகளுக்கு, வாழ்விடம் இல்லாமல் போனது தான், அவற்றின் எண்ணிக்கை குறைய காரணம்.வீடுகளின் முகப்பில் அட்டைப் பெட்டி வைத்து, அதில், அரிசி, சிறு தானியம் போட்டு வைத்தாலே போதும்; சிட்டுக்குருவிகள் அங்கு வந்து இனப்பெருக்கம் செய்யும்; இத்தகைய முயற்சியை எடுக்கும் மாணவ, மாணவியருக்கு, பரிசு வழங்கி ஊக்குவிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.