தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி கோமா நிலைக்கு சென்றதாக புகார்

UPDATED : மார் 27, 2024 12:00 AM
ADDED : மார் 27, 2024 10:59 AM

தர்மபுரி:
தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால், நர்சிங் கல்லுாரி மாணவி கோமா நிலைக்கு சென்றதால், மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அடுத்த லாலாகொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கராஜ் மகள் காயத்ரி, 18; தனியார் நர்சிங் கல்லுாரியில், பி.எஸ்சி., நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார்.அவருக்கு கடந்த, 18ல் உடல்நிலை பாதிப்பால், தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தோம். இதில், அறுவை சிகிச்சை முடிந்த பின் கடந்த, 20 அன்று ஊசி போட்டபோது மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர் பரிசோதித்து, சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பினார். அங்கு கடந்த, 23 அன்று சுயநினைவின்றி இருப்பதால், வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இந்நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, காயத்ரியின் இந்நிலைக்கு காரணமான, தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தர்மபுரி டவுன் போலீஸ் மற்றும் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., காயத்ரியிடம் மனு அளித்தனர். இதையடுத்து சிறப்பு மருத்துவர் கொண்டு சிகிச்சையளிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம், ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார்.