கல்லுாரி மாணவர்கள் மோதல்: 6 பேருக்கு காப்பு

UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM
ADDED : ஜூலை 15, 2024 08:53 AM
கோடம்பாக்கம்:
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிரின்சண்ணி, 28; கோடம்பாக்கம் ரயில்வே பாடர் பகுதியில் தங்கி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்து வருகிறார்.
படிப்பை முடித்து சொந்த ஊர் செல்ல உள்ளதால், நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் ரஞ்சித், அருண், வைஷ்ணவ், மதன் உள்ளிட்டோருக்கு மது விருந்து வைத்துள்ளார்.
பின், விஸ்வநாதபுரம் பிரதான சாலையில், இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாமல் நடந்து சென்றுள்ளனர். இதில், சிரின்சண்ணி மீது பைக் லேசாக மோதியதால், பைக்கில் வந்த மூவரையும், நண்பர்களுடன் சேர்ந்து சிரின்சண்ணி தாக்கினார்.
இதையடுத்து அவர்கள், பைக்கை அங்கே போட்டு விட்டு தப்பிச் சென்று, மூன்று பேரை அழைத்து வந்துள்ளனர். பின், தங்கள் கொண்டு வந்த கட்டையால், சிரின் சண்ணி, அவரது நண்பர்களை தாக்கினர்.
இதில், மரக்கட்டையில் இருந்த ஆணி, சிரின்சண்ணியின் இடதுபக்க விலாவில் குத்தி, காயம் ஏற்பட்டது. ரஞ்சித்திற்கு இடது பக்க தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து விசாரித்த கோடம்பாக்கம் போலீசார், கோடம்பாக்கம் அக்பரபாத் தெருவைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் ஜோஷ்வா, 19, விக்னேஷ், 22; வடபழனி பஜனை கோவில் தெருவை சேர்ந்த தனுஷ், 20, கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி யூவனேஷ், 19, தினேஷ், 20, வினோத், 20, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.