Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியாளர்களுக்கான மாதிரி நேர்காணலில் பங்கேற்க அழைக்கிறார் கோவை கலெக்டர்

பொறியாளர்களுக்கான மாதிரி நேர்காணலில் பங்கேற்க அழைக்கிறார் கோவை கலெக்டர்

பொறியாளர்களுக்கான மாதிரி நேர்காணலில் பங்கேற்க அழைக்கிறார் கோவை கலெக்டர்

பொறியாளர்களுக்கான மாதிரி நேர்காணலில் பங்கேற்க அழைக்கிறார் கோவை கலெக்டர்

UPDATED : ஆக 23, 2024 12:00 AMADDED : ஆக 23, 2024 08:15 AM


Google News
கோவை:
ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாதிரி நேர்காணலை நடத்துகிறது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். தகுதியுடையவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளதாவது:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் உள்ள, உதவிப் பொறியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு நடந்தது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணலை, வரும் 28 முதல் செப்., 3 வரை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ளது.

அதற்காக, கோவையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், மாதிரி நேர்காணல், வரும் 24 காலை 9:30 மணி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.

நேர்காணல் தேர்வுக்கு வரும் மனுதாரர்கள், தாங்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்கான அழைப்பாணை, சுய விபரங்கள், மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன், மாதிரி நேர்காணலில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 93615 76081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us