Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய தரவரிசை பட்டியலில் கோவை கல்லுாரிகள் சிறப்பு

தேசிய தரவரிசை பட்டியலில் கோவை கல்லுாரிகள் சிறப்பு

தேசிய தரவரிசை பட்டியலில் கோவை கல்லுாரிகள் சிறப்பு

தேசிய தரவரிசை பட்டியலில் கோவை கல்லுாரிகள் சிறப்பு

UPDATED : ஆக 16, 2024 12:00 AMADDED : ஆக 16, 2024 08:19 AM


Google News
கோவை:
கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எப்., தேசிய தரவரிசைப்பட்டியலில், அனைத்து பிரிவுகளிலும், கோவை கல்லுாரிகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, முன்னிலை பெற்றுள்ளன.

மத்திய அரசு தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் அனைத்து கல்விநிறுவனங்களின் தரவரிசை பட்டியல் தேசியளவில் வெளியிடப்படும். அதில், கல்லுாரி மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் கல்வித்தகுதி, கட்டமைப்பு, ஆய்வக வசதி, நுாலகம், மைதானம், விளையாட்டு, ஆராய்ச்சிகள், பிற சமூக ஈடுபாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என, பல்வேறு பிரிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் பட்டியல் வெளியிடப்படும்.

இப்பட்டியல், பல்கலை, ஒட்டுமொத்த கல்வி நிறுவனம், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மாநில பல்கலைகள், கட்டடவியல், மேலாண்மை, வேளாண்மை, பார்மசி, சட்டம் உள்ளிட்ட 16 பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

கலை அறிவியல் கல்லுாரிகள் பிரிவில், முதல் 100 இடங்களில் 9 கல்லுாரிகள் கோவையில் இருந்து இடம் பெற்றுள்ளன. பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் 7ம் இடத்திலும், பி.எஸ்.ஜி., 11ம் இடத்திலும், கொங்குநாடு 52, ராமகிருஷ்ணா கல்லுாரி 56, அரசு கலை கல்லுாரி 67 , என்.ஜி.பி., கல்லுாரிகள் 75, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா 82, எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி 94வது இடத்திலும் உள்ளன.

ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், அமிர்த விஷ்வ வித்யாபீடம் 18வது இடத்திலும், பாரதியார் பல்கலை 44ம் இடத்திலும் உள்ளன.

பல்கலைகள் அளவில், அமிர்த விஷ்வ வித்யாபீடம் 7ம் இடத்திலும், பாரதியார் பல்கலை 26, தமிழ்நாடு வேளாண் பல்கலை 84, அவினாசிலிங்கம் பல்கலை 98வது இடத்திலும் உள்ளன. பொறியியல் கல்விநிறுவனங்கள் பிரிவில், அமிர்த விஷ்வ வித்யாபீடம் 6ம் இடத்திலும், பி.எஸ்.ஜி., டெக்., 67ம் இடத்திலும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி 83ம் இடத்திலும் உள்ளன.

வேளாண்மை பிரிவில், தமிழ்நாடு வேளாண் பல்கலை தேசிய அளவில், 6ம் இடத்தை பெற்றுள்ளது. மாநில பல்கலை பிரிவில், கோவையை சேர்ந்த பாரதியார் பல்கலை 8ம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலை 49வது இடத்தில் உள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us