நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்கள் கடிதம்

UPDATED : மே 06, 2024 12:00 AM
ADDED : மே 06, 2024 11:19 AM
உத்தர கன்னடா:
லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்த மாணவர்கள் மூலம், அவர்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி, மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை மாவட்ட நிர்வாகங்கள் செயல்படுத்தி வருகின்றன.
உத்தர கன்னடா மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் துறை, சமூக நலத்துறை, பட்டியலின வகுப்பினர் நலத்துறையினர் கீழ் விடுதிகள் உள்ளன. இங்கு, 4,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களின் மூலம், அவரவர் பெற்றோருக்கு ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து கடிதம் எழுத வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ - மாணவியருக்கு மாவட்ட நிர்வாகமே தபால் அட்டைகளை வழங்கியது. பெற்றோருக்கு கடிதம் எழுதுமாறு பரிந்துரைத்தனர்.
மாணவர்களும், தங்கள் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், 'இப்போது தேர்தல் வந்துள்ளது. உங்களின் பொன்னான ஓட்டுகளை எந்த சலனமுமின்றி போட்டு, நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள். நாட்டின் எதிர்காலத்துக்காக அனைவரும் பொறுப்புடன் வாக்களியுங்கள்' என குறிப்பிட்டுள்ளனர்.
பல மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு மட்டுமின்றி, அந்த கடிதத்தில் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரும் ஓட்டு போட வலியுறுத்துமாறு கேட்டு கொண்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கள் குழந்தைகள் ஓட்டு போட கோரி, கடிதம் எழுதியிருப்பதை பார்த்தாவது, 10,000க்கும் மேற்பட்ட பெற்றோர் ஓட்டுச்சாவடிக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.