UPDATED : ஜன 27, 2025 12:00 AM
ADDED : ஜன 27, 2025 11:21 AM
ராமநாதபுரம் :
ராமநாதபுரத்தில் நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற கருத்தை வலியுறுத்தி மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் லியோன் தலைமை வகித்தார். முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி முதல்வர் டி.சேகர், கல்வியியல் கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மாநாட்டினை துவக்கிவைத்து பேசினார். பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை குறித்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கட்டுரை சமர்ப்பித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் ரவி, அறிவியல் இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி துணை முதல்வர் கார்த்திக், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி பங்கேற்றனர்.