Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிக்கண்ணா கல்லுாரி: இன்று கவுன்சிலிங் துவக்கம்

சிக்கண்ணா கல்லுாரி: இன்று கவுன்சிலிங் துவக்கம்

சிக்கண்ணா கல்லுாரி: இன்று கவுன்சிலிங் துவக்கம்

சிக்கண்ணா கல்லுாரி: இன்று கவுன்சிலிங் துவக்கம்

UPDATED : மே 30, 2024 12:00 AMADDED : மே 30, 2024 09:20 AM


Google News
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முதல்கட்ட கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:


மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் www.cgac.in என்ற கல்லுாரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தர வரிசையை அறிந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், தேசிய மாணவர் படை ஏ சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கிறது.

வணிகவியல் மற்றும் கலைப்பிரிவுகளுக்கான பாடப்பிரிவுகளுக்கு (பி.காம், பி.காம்., - சி.ஏ., பி.காம்.,. - ஐ.பி., பி.பி.ஏ., வரலாறு, பொருளியல்) கலந்தாய்வு, அடுத்த மாதம், 10, 11 தேதிகளில் நடத்தப்படுகிறது. 12, 13 ஆகிய தேதிகளில், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான (வேதியியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் ஆடை வடிவமைப்பு நாகரிகம்) கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 14ம் தேதி காலை, தமிழ் இலக்கியம்; மாலை, ஆங்கில இலக்கிய பாடப்பிரிவுகளுக்கு, கலந்தாய்வு நடக்கும்.

கலந்தாய்வில் பங்கேற்க வருபவர்கள் பெற்றோருடன் வர வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு, 6 போட்டோ எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us