Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பகுதி நேர பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

பகுதி நேர பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

பகுதி நேர பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

பகுதி நேர பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

UPDATED : டிச 23, 2024 12:00 AMADDED : டிச 23, 2024 10:47 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:
முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில், பகுதி நேர பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பேட்டர்ன் மேக்கிங், பேட்டர்ன் இன்ஜினியரிங், மெர்ச்சன்டைசிங்கில் மாணவர்கள் 15 பேர் பயிற்சி முடித்துள்ளனர்.
மாணவர்களுக்கான சான்று வழங்கும் விழா, நேற்று நடந்தது. கல்லுாரியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி , கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், மாணவர்களுக்கு சான்று வழங்கினர்.
பகுதிநேர பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மணியன் கூறியதாவது:


திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கமும், நிப்ட்-டீ கல்லுாரியும் இணைந்து, பகுதி நேர ஆயத்த ஆடை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுவருகிறது. கடந்த ஜூன் மாதம் துவங்கிய முதல் பயிற்சி வகுப்பில் இணைந்த மாணவர்கள், தற்போது பயிற்சியை முடித்துள்ளனர். அவர்களுக்கு தற்போது சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், புதிய தொழில் முனைவோர், வேலையில்லாத பட்டதாரிகள் அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் இணையலாம்.

அடுத்த பயிற்சி வகுப்பு, வரும் ஜனவரி மாதம் துவங்கும். பகுதிநேர பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளோர், 78451 84962, 95979 14182 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us