Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாற்றாண்டு நுாலக சீரமைப்பு பணிகள் நிறைவு

நுாற்றாண்டு நுாலக சீரமைப்பு பணிகள் நிறைவு

நுாற்றாண்டு நுாலக சீரமைப்பு பணிகள் நிறைவு

நுாற்றாண்டு நுாலக சீரமைப்பு பணிகள் நிறைவு

UPDATED : ஜூன் 05, 2024 12:00 AMADDED : ஜூன் 05, 2024 09:54 AM


Google News
மதுரை:
மதுரையில் கடந்த மாதம் பெய்த மழையில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தின் மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு தரை தளத்தில் நீர் தேங்கியது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கின.

முதன்மை நுாலகர் தினேஷ் குமார் கூறியதாவது:

மேல் தளத்தில் பெய்யும் மழைநீர், குழாய்கள் மூலம் நுாலகத்திற்குள் உள்ள சேம்பரில் விழும். அதில் துாசிகள் வடிகட்டப்பட்டு நீர் மட்டும் வெளியேறிய நிலை இருந்தது.

கனமழையில் பார்வையாளர்கள் தவறுதலாக வீசிய பிளாஸ்டிக் குப்பையால் சேம்பரில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் நிரம்பி நுாலகத்திற்குள் வழிந்தது.

பின் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து வடிகால் குழாய்களை பெரிதாக்கி நுாலகத்திற்கு வெளியே மழைநீரை நேரடியாக வெளியேற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

வெளியே மண் தரை மீது பேவர் பிளாக் கற்கள் அமைத்துள்ளதால் மழைநீர் உறிஞ்சப்பட்டு விடும். அதிகப்படியான நீர் கால்வாயில் சேரும் விதமாக தரையும் சற்று சாய்வுடன் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே வருங்காலத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது. வாரம் ஒருமுறை பொதுப்பணித்துறையுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்கிறோம். நுாலகத்திற்கு வருவோர் மதியம் சாப்பிட்ட பின் பார்க்கிங் பகுதி பைப்களில் உணவு மிச்சங்களை கொட்டி கை கழுவுவதால் கழிவுநீர் தேங்குவதாக புகார் வருகிறது.

வளாகத்தில் எங்கு சாப்பிட்டாலும் உள்ளே வந்து கை கழுவுமாறு பலமுறை அறிவுறுத்தியும் கேட்பதில்லை. பொதுப்பணித்துறையுடன் இணைந்து இதற்கான மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us