நவீன வாசிக்கும் கருவி பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

UPDATED : ஜன 24, 2025 12:00 AM
ADDED : ஜன 24, 2025 11:36 AM

சென்னை:
நவீன வாசிப்பு கருவி பெற, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகள், கல்லுாரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி வழங்கப்படுகிறது. இக்கருவியில் குரல் குறிப்பு, பார்வையற்றவர்களால் எளிதாக படிக்கவும், பேசவும், பயன்படுத்தவும் கூடிய பொத்தான்கள் உள்ளன.
நவீன வசதிகள் கொண்ட வாசிப்பு கருவியை பெற, தென் சென்னைக்கு உட்பட்ட உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லுாரி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
விவரங்களுக்கு 044 -- 24714758 என்ற எண்ணிலோ அல்லது முகவரியிலோ நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.