UPDATED : ஏப் 13, 2024 12:00 AM
ADDED : ஏப் 13, 2024 10:17 AM
கரூர் :
கிராம பஞ்சாயத்துக்களில் புதர்மண்டி கிடக்கும் நுாலகங்களை, சீரமைத்து பயன்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த, 2006-11ல், தி.மு.க., ஆட்சியின் போது, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களுக்கு தலா, 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதில், ஐந்து முதல் ஆறு லட்ச ரூபாய் செலவில், நுாலகம் கட்டப்பட்டது. புத்தகங்கள், சேர்கள் வாங்கவும், ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டது. கல்வி, விஞ்ஞானம், அரசியல், கண்டுபிடிப்புகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வங்கி தேர்வு போன்ற உயர் படிப்புகளுக்கான புத்தகங்களும், கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள புதிய நுாலகங்களில் இடம் பெற்றன.
இதனால், கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவிகள் நுாலகங்களுக்கு செல்வது அதிகரித்தது. இந்நிலையில், 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கைவிடப்பட்டது. இதனால், நுாலகங்களை பராமரிப்பதிலும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பல்வேறு கிராம பஞ்சாயத்துக்களில் செயல்பட்டு வந்த, நுாலகங்கள் மூடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள, 157 கிராம பஞ்சாயத்துகளில், பெரும்பாலான நுாலகங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது.
இதனால், மாணவ, மாணவிகள் நுாலகங்களுக்கு செல்வது குறைந்தது.கடந்த, 2021 ல் தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட நிலையில், கரூர் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்துக்களில் கட்டப்பட்ட சில நுாலகங்கள் சீரமைக்கப்பட்டது. ஆனால், பல நுாலகங்கள் திறக்கப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. அதை, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும்.