Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐஐடி மற்றும் ஐஐடிஎம் இணைந்து வழங்கும் பி.எஸ்சி., பி.சி.ஏ திட்டம்

ஐஐடி மற்றும் ஐஐடிஎம் இணைந்து வழங்கும் பி.எஸ்சி., பி.சி.ஏ திட்டம்

ஐஐடி மற்றும் ஐஐடிஎம் இணைந்து வழங்கும் பி.எஸ்சி., பி.சி.ஏ திட்டம்

ஐஐடி மற்றும் ஐஐடிஎம் இணைந்து வழங்கும் பி.எஸ்சி., பி.சி.ஏ திட்டம்

UPDATED : ஜூன் 08, 2024 12:00 AMADDED : ஜூன் 08, 2024 11:00 AM


Google News
சென்னை:
சென்னை ஐஐடி மற்றும் ஐஐடிஎம் ப்ரவர்த்தக் இணைந்து பி.எஸ்சி., பி.சி.ஏ மாணவர்களுக்கு இலவச பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளன.

செய்தி குறிப்பு:

கரூர் மற்றும் கோவையை சேர்ந்த பி.எஸ்சி., பி.சி.ஏ மாணவர்களுக்காக 3 மாதகால நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு தொழில் துறைக்கு தேவையான தொழில்நுட்பத் திறன் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் பண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், விண்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் & பேக்அப் அடிப்படைகள், தனித்திறன்கள் போன்றவை இந்த பாடநெறியில் இடம்பெறும். லைட்ஸ்ட்ரோம் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் https://forms.gle/7RhAKgrGRgwr17zd6 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us