UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 12:32 PM

புருனேவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 2025 - 2026ம் கல்வி ஆண்டில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
படிப்பு நிலைகள்:
டிப்ளமோ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள்.
உதவித்தொகை விபரம்:
இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கான முழு கல்விக்கட்டணம், பதிவு கட்டணம், தேர்வு கட்டணம், விமான செலவு, தங்குமிட செலவு, காப்பீட்டு செலவு ஆகியவற்றை புருனே அரசே ஏற்றுக்கொள்கிறது. இவை தவிர, மாத செலவினங்களுக்காக 500 புருனே டாலர், உணவு செலவினங்களுக்காக மாதம் 100 புருனே டாலர், புத்தக செலவினங்களுக்காக ஆண்டுக்கு 600 புருனே டாலர் மற்றும் இதர செலவினங்களுக்காக 500 புருனே டாலர்களும் வழங்கப்படுகின்றன.
தகுதிகள்:
இளநிலை மற்றும் டிப்ளமா படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்புபவர்கள் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும். உரிய கல்வித் தகுதியுடன் ஐ.இ.எல்.டி.எஸ்., டோபல், ஐ.ஜி.சி.எஸ்.சி., ஜி.சி.இ., போன்ற ஆங்கில மொழிப்புலமை பரிசோதனை தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை திட்டம் புருனேவில் முதல்முறையாக படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள்:
புருனே தருஸ்ஸலாம் யுனிவர்சிட்டி - www.ubd.edu.bn
யுனிவர்சிட்டி இஸ்லாம் சுல்தான் ஷெரீப் அலி - www.unissa.edu.bn
யுனிவர்சிட்டி டெக்னாலஜி புருனே - www.utb.edu.bn
கோலேஜ் யுனிவர்சிட்டி பெர்குரு உகாமா செரி பெகவான் - www.kupu-sb.edu.bn
பொலிடெக்னிக் புருனே - www.pb.edu.bn
விண்ணப்பிக்கும் முறை:
https://apply.ubd.edu.bn/orbeon/uis-welcome/ அல்லது https://apply.utb.edu.bn/ இணையபக்கம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 15
விபரங்களுக்கு:
https://www.mfa.gov.bn/pages/online-bdgs.aspx