திண்டுக்கல் பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

UPDATED : ஜன 21, 2025 12:00 AM
ADDED : ஜன 21, 2025 09:17 AM

திண்டுக்கல் :
திண்டுக்கல் தனியார் பள்ளி, கல்லுாரியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பழைய நீதிமன்றம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ.,பள்ளி, பழநி ரோடு ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பி.எஸ்.என்.ஏ., கல்லுாரிக்கு நேற்று மதியம் 3:00 மணிக்கு வெடிகுண்டு இருப்பதாக ஒரே முகவரியிலிருந்து மின்னஞ்சல் வந்தது. அதிர்ச்சியடைந்த பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். போலீசாருக்கு தகவல் கொடுக்க எஸ்.பி., பிரதீப் தலைமையில் கியூ பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு, சந்தேகப்படும் படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. மின்னஞ்சல் இரண்டும் ஒரே முகவரியில் இருந்து வந்துள்ளதால் அனுப்பியவர் யார் என்பதை கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.