Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஐ.ஏ.எஸ்., ஆவது 'மேஜிக்' அல்ல!

ஐ.ஏ.எஸ்., ஆவது 'மேஜிக்' அல்ல!

ஐ.ஏ.எஸ்., ஆவது 'மேஜிக்' அல்ல!

ஐ.ஏ.எஸ்., ஆவது 'மேஜிக்' அல்ல!

UPDATED : ஜூன் 20, 2024 12:00 AMADDED : ஜூன் 20, 2024 10:47 PM


Google News
Latest Tamil News
* சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற எந்தவிதமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்?
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நாட்டின் மதிப்பு மிக்க தேர்வு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற உயர் ஆட்சிப் பணியிடங்களுக்கு திறமையானவர்களை கண்டறிய உதவும் சிவில் சர்வீசஸ் தேர்வு!
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற, தேர்வு எழுதுபவர்களிடம் யு.பி.எஸ்.சி., என்ன எதிர்பார்க்கிறது என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் டெஸ்ட் தேர்வு போன்றது இத்தேர்வு; 20 ஓவர் போட்டியல்ல. இத்தேர்வில் சாதிக்க முறையாக திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டாலே குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும். கற்றல் மட்டும் போதாது; கற்ற அறிவை திறம்பட செயல்படுத்த போதிய திறன்களும் அவசியம். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளைபுரிந்துகொண்டு, நிதானமாகவும், பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.
* எந்த பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?
சமகால நிகழ்வுகள் பாடத்திட்டத்தின் ஓர் பிரத்யேக பகுதியாக அல்லாமல், அனைத்து பாடங்களிலும் அவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வரலாறு, அரசியலைமைப்பு, பொருளாதாரம், புவியியல், சமூகம் ஆகியவை குறித்த அடிப்படை அறிவு அவசியமாகும் அதேநேரம், தற்போதைய நிகழ்வுகள் குறித்த அறிவும் முக்கியம். தேர்வுக்கான பாடத்திட்டங்களை படிப்பதோடு மட்டுமல்லாமல், அதனோடு சார்ந்த தற்போதைய நிகழ்வுகளை அறிந்துகொள்வதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஆகவே, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சியில் ஆழமான அறிவை வளர்த்துக்கொள்வதற்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இரண்டாவதாக, பல்வேறு பரிமாணங்களில் சமகால நிகழ்வுகளை அறிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக, கேள்விகளுக்கு ஏற்ப பதில் அளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு கால அட்டவணையை தயாரித்து, பாடத்திட்டங்களை சிறிய சிறிய பகுதியாக பிரித்துக்கொண்டு, திட்டமிட்டு அதன்படி தயாராக வேண்டும். இத்தேர்வில் வெற்றிபெற எந்த 'மேஜிக்'கும் இல்லை. முறையாகவும் ஆழமாகவும் கற்றல், படித்தவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுதல், சரியாக வெளிக்கொணர்தல் ஆகியவையே அவசியம்.
* இத்தேர்வு வெற்றிக்காக ஒருவர் எவ்வளவு காலம் தயாராகலாம்?
தேர்வுக்கு தயாராகும் அனைவராலும் வெற்றி பெற முடியாது என்பது நிதர்சனம். ஒரு மாணவர் 6 முறை இத்தேர்வை எழுத அனுமதிப்பது என்பது மிகவும் அதிகமான காலம். இத்தேர்வுக்கு தயாராவதிலேயே பலர் தங்களது பிரதான இளமைக் காலத்தை கழிப்பதை பார்க்க முடிகிறது. இத்தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. அதிகபட்சம் 4 ஆண்டுகள் இத்தேர்வுக்கான பயிற்சியில் ஒருவர் ஈடுபட்டால் போதும். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவரவர், அவர்களது வாழ்க்கையை வேறு விருப்பமான துறையில் அமைத்துக்கொள்வதில் ஆர்வம் செலுத்தினால் நல்லது. ஆகவே, அதற்குஏற்ப யு.பி.எஸ்.சி., மாற்றத்தை கொண்டுவந்தால் நல்லது என்பது எனது கருத்து.
* உங்கள் பயிற்சி நிறுவனத்தின் பிரதான அம்சம்?
சிவில் சர்வீசஸ் தேர்விற்கு பயிற்சி அளிப்பதில் 70 ஆண்டுகால அனுபவமுள்ள ராவ்ஸ் ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள், கல்லூரி பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வதில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எந்த ஒரு பாடத்தையும் ஆழமாக கற்றுக்கொள்ள உதவுகிறோம். மாணவர்களது சந்தேகங்களுக்கு உடனடியாகவும், உரிய முறையிலும் தீர்வை வழங்கும் வகையில் பயிற்சி அளிக்கிறோம்.
-அபிஷேக் குப்தா, சி.இ.ஓ., ராவ்ஸ் ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள், புதுடில்லி.
contact@rauias.com




      Our Apps Available On




      Dinamalar

      Follow us