நீர்நிலைகளில் சிறுவர் சிறுமியர் கவனமாக இருங்கள்!

UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 11:05 AM

திருப்பூர்:
கோடை விடுமுறையில் பெற்றோர் உதவி இல்லாமல் நீர்நிலை பக்கம் செல்ல சிறுவர், சிறுமியரை அனுமதிக்காதீர்,' என, தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்குகின்றனர்.
திருப்பூர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய, உதவி மாவட்ட அலுவலர், வீரராஜ் கூறியதாவது:
தண்ணீர் ஒரு மாயை; அதில் கொண்டாட வயது வித்தியாசமில்லை. தண்ணீரைப் பார்த்தாலே எல்லார் மனதும் உற்சாகமும், குதுாகலமும் கொள்ளும். ஆபத்தை மறந்து விடுவர்; தோற்றப்பிழை நம்மை ஏமாற்றும்.
கல்குவாரி, கிணற்றில் முழ்கி விடுவோரை காப்பாற்றுவது கடினம். பாறைக்குழிகளில் நீண்ட காலம் தண்ணீர் தேங்கி நிற்கும். ஆழத்தை கணிக்க முடியாது. தெளிவில்லாத தண்ணீர் என்பதால், சூரிய ஒளி ஊடுருவ வாய்ப்பு இருக்காது. குறைந்தபட்ச துாரத்தில் மூழ்கியிருந்தாலும் கண்டுபிடிப்பது கடினம்.
நீச்சல் தெரியாத ஒருவர் மூழ்கி இருக்க கழுத்தளவு அல்லது தலையை மூடும் அளவுக்கு தண்ணீர் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
இடுப்பளவு தண்ணீர் இருந்தால் கூட, ஆழம் என நினைத்து பயத்தில் பலர், காலை நிலத்தில் ஊன்ற மாட்டார்கள்; அதே பதட்டத்தில் நீரில் முழ்கும் போது, தண்ணீரை அதிகளவில் குடித்து விடுவர். இதனால், உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது.
உடனடி தகவல்மிகவும் முக்கியம்
கல்குவாரி, பாறைக்குழிகள், திறந்தவெளி கிணறு உள்ளிட்ட நீர்நிலை உள்ள பகுதிக்கு நீச்சல் தெரியாதவர்களை அனுப்பக்கூடாது. நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் பெற்றோர் கட்டாயம் உடனிருக்க வேண்டும். கண் பார்வையில் குழந்தைகளை வைத்திருக்க வேண்டும். சுற்றுலா செல்லும் போது பெரியவர்களே நீச்சல் தெரிந்திருந்தாலும், கொண்டாட்டங்களின் போது கவனமாக இருக்க வேண்டும்.
ஒருவர் நீர்நிலையில் மூழ்கியிருப்பார்என்பதை உறுதி செய்வதில் தாமதம் கூடாது. நீர்நிலைகளுக்கு அருகில் ஆடை, காலணி உள்ளதை பார்த்து விட்டு, அருகில் தேடி விட்டு, காணவில்லை என்ற பின்தான், பெரும்பாலும் தகவல் தெரிவிக்கின்றனர்; இது தவறு.
தகவல் தெரிவிக்கும் நேரம் மிக முக்கியம். எவ்வளவு சீக்கிரம் நாங்கள் தண்ணீரில் இறங்குகிறாமோ, அதற்கேற்ப தான், நீரில் முழ்கியவரை காப்பாற்ற முடியும். எனவே, உடனடி தகவல் மிக முக்கியம்.
காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்தார் என்ற தகவல் சில நேரங்களில் கிடைக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு. தண்ணீரில் தத்தளிப்பவர் உயிருக்கு போராடுபவராக, மரண பீதியில் உள்ளவராக இருப்பார்.
அவரை காப்பாற்ற தண்ணீருக்குள் நீச்சல் அடித்தபடி உள்ளே சென்று, பின்புறம் இருந்து தள்ளித் தான் மேட்டுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். காப்பாற்ற செல்வோரின் ஒரு கை செயல்பாட்டில் இருக்க வேண்டும்; மறுகை காப்பாற்ற வேண்டும். பல நேரங்களில் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பவரை காப்பாற்ற நேராக (மூழ்குபவர் பார்க்கும் வகையில்) தண்ணீரில் குதித்து செல்வோரும் இறப்பதற்கு காரணம் அது தான்.
காப்பாற்ற செல்வோர் தைரியம், துணிச்சல் மிக்கவராக சமயோஜிதமாக சிந்திக்க கூடியவராக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு, வீரராஜ் தெரிவித்தார்.