Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நந்தா கலை கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து

நந்தா கலை கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து

நந்தா கலை கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து

நந்தா கலை கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து

UPDATED : ஏப் 06, 2024 12:00 AMADDED : ஏப் 06, 2024 08:37 PM


Google News
ஈரோடு:
ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்கலை மானிய குழு (யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன்), தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் கூறியதாவது:

பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ், 24 ஆண்டுகளுக்கு மேலாக நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கற்பித்தல் முறை, உட்கட்டமைப்பு வசதி, வேலை வாய்ப்பு, ஆராய்ச்சி கட்டுரை வெளியிடுதல், ஆராய்ச்சி காப்புரிமை, தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்கு, பயிற்சி திட்டங்கள், தேர்ச்சி விகிதம், சமூக நற்பணிகள் உள்ளிட்டவை அடிப்படையில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
கல்லுாரி முதல்வர் மனோகரன் கூறுகையில், நந்தா கலை மற்றும் அறிவியல் 15 இளநிலை, 6 முதுநிலை பட்டப்படிப்புகளுடன் ஏழு முனைவர் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மூலம், 3,600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, சிறப்பான கல்வியினை வழங்கி வருகிறது.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் கீழ், 2,000 ஆண்டில் இருந்து இயங்கி வரும் இக்கல்லுாரி, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் மூலம் சிறந்த கல்லுாரிக்கான சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கு உறுதுணையாக செயல்புரிந்த நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us