துணை பேராசிரியர் போட்டி தேர்வு திண்டிவனத்தில் பயிற்சி துவக்க விழா

UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:32 AM

மயிலம்:
திண்டிவனத்தில் இ.சி.சி., தமிழாய்வு மையம் மயிலம் தமிழ் அகாடமி சார்பில் தமிழ் துணை பேராசிரியர் போட்டி தேர்வு பயிலரங்கம் துவக்க விழா நடந்தது.
எண்டியூர் கோச்சிங் சென்டரில் நடந்த பயிலரங்க துவக்க விழாவிற்கு, மயிலம் தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் சற்குணம் தலைமை தாங்கினார். கல்லுாரியின் முன்னாள் முதல்வர் லட்சா ராமன் வரவேற்றார்.
இ.சி.சி., ஆய்வு மைய நிறுவனர் சேஷசையன் முன்னிலை வகித்தார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரி பேராசிரியர் சிவக்குமார் நோக்க உரையாற்றினார். விழாவில் சேலம் கோட்டை ரயில்வே துறை நிதி மேலாளர் சித்ரா தியாகராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் புள்ளியியல் அலுவலர் முத்துக்குமரன், பயிற்சி மைய வழிகாட்டி பயிற்சியாளர் பிரவீன் குமார் வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் கோமதி இணைப்பு உரையாற்றினார்.
கோபிநாத், முனியம்மாள், பவித்ரா, ஏஞ்சலின், மேனகாதேவி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். துணை பேராசிரியர்கள், முதுகலை பட்டதாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.